இந்தியா

தில்லி விவசாயிகள் பேரணியில் ஏற்பட்ட வன்முறைக்கு ஆம் ஆத்மி கண்டனம்

26th Jan 2021 05:45 PM

ADVERTISEMENT

தில்லி போராட்டத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை வன்மையாக கண்டிப்பதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் இன்று மாபெரும் டிராக்டர் பேரணியை முன்னெடுத்துள்ளனர். லட்சக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டுள்ள இந்த போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. 

அனுமதி கொடுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து வேறு வழிகளில் விவசாயிகள் சென்றதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் பேரணியை காவல்துறை தடுத்து வருகிறது. காவல்துறை கட்டுப்பாடுகளை மீறி விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டனர். இதனால் தில்லி முழுவதும் வன்முறைக் களமாக காட்சி அளிக்கிறது. தில்லியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. 

தில்லியில் நடைபெற்ற வன்முறைக்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ADVERTISEMENT

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி, 'இன்று வன்முறையில் ஈடுபடுபவர்கள் விவசாய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. மிகவும் அமைதியாகவும் ஒழுக்கமாகவும் நடந்து கொண்டிருந்த இயக்கத்தை அவர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர்.

இன்றைய போராட்டத்தில் காணப்பட்ட வன்முறையை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். நிலைமை இவ்வளவு மோசமாக மோசமடைய மத்திய அரசு அனுமதித்தது வருந்தத்தக்கது. இந்த இயக்கம் கடந்த இரண்டு மாதங்களாக அமைதியான முறையில் நடைபெற்றது' என்று தெரிவித்துள்ளது. 

Tags : Farmers protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT