இந்தியா

கேரளத்தில் புதிதாக 6,293 பேருக்கு கரோனா

DIN


கேரளத்தில் புதிதாக 6,293 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கேரளத்தில் புதிதாக 6,293 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள் 78 பேர். 5,741 பேர் தொடர்பிலிருந்ததன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 426 பேருக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.

கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் 10.43 சதவிகிதமாக உள்ளது. 

மேலும் 19 பேர் நோய்த் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மாநிலத்தில் மொத்த பலி எண்ணிக்கை 3,643 ஆக உயர்ந்துள்ளது. 

5,290 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,446 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 71,607 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

SCROLL FOR NEXT