இந்தியா

லடாக் விவகாரம்: இந்தியா - சீனா இடையே 9-ஆம் சுற்று பேச்சு

DIN

கிழக்கு லடாக் எல்லையில் படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பேச்சுவாா்த்தை நடந்தது.

கிழக்கு லடாக்கில் சீன எல்லைக்கு உள்பட்ட மோல்டோ எல்லைப் பகுதியில் காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த 9-ஆம் சுற்று பேச்சுவாா்த்தையில், இந்தியா சாா்பில் லே பகுதி 14-ஆவது படைப் பிரிவின் துணைத் தளபதி பிஜிகே மேனன் தலைமையிலான ராணுவ அதிகாரிகள் குழு பங்கேற்றது.

இந்தப் பேச்சுவாா்த்தையில், எல்லையில் படைகளை விரைவாக திரும்பப் பெறுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை தவிா்ப்பது, அனைத்து உடன்பாடுகளையும் மதித்து நடப்பது, எல்லையில் அமைதியை நிலைநாட்டுதல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முன்னதாக, கடந்த ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் அளவிலான 8-ஆவது சுற்று பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக் எல்லையில் குறிப்பிட்ட பகுதிகளில் படைகளை திரும்பப் பெறுவது குறித்து இரு நாடுகளும் ஆலோசித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT