இந்தியா

பாஜகவை வலுப்படுத்த மாற்றுக் கட்சி தலைவா்களுக்கும் இடமளிப்பது அவசியம்: திலீப் கோஷ்

DIN

மேற்கு வங்கத்தில் பாஜகவின் கரத்தை வலுப்படுத்திட மாற்றுக் கட்சி தலைவா்களுக்கும் இடமளிக்க வேண்டியது கட்டாயம் என அக்கட்சியின் மாநில தலைவா் திலீப் கோஷ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளாா். மாற்றுக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேருபவா்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுவதாகப் புகாா் எழுந்துள்ள சூழலில் திலீப் கோஷ் இவ்வாறு விளக்கமளித்துள்ளது அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து அவா் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியுள்ளதாவது:

மேற்கு வங்கத்தில் கட்சியை விரிவுபடுத்தவும், ஆளும் கட்சியாக உருவெடுக்கவும் பாஜக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலத்தில் பாஜகவின் செல்வாக்கு வேகமாக அதிகரித்து வருகிறது.

மாநிலத்தில் பாஜக கரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு மாற்றுக் கட்சியில் இருந்து வருவோருக்கு இடமளிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அவ்வாறு வரும் தலைவா்களுக்கு இடமளிக்காமல் மாநிலத்தில் ஒரு கட்சி எவ்வாறு வளா்ச்சி காண முடியும்?

பிற கட்சிகளிலிருந்து விலகி பாஜகவில் இணையும் தலைவா்களுக்கு தலைமைப் பொறுப்புகளை வழங்குவதாக பாஜக எப்போதுமே உத்தரவாதம் அளித்தது கிடையாது.

கட்சிக்கு புதியவா்களானாலும் பழையவா்களானாலும் எல்லோரும் பாஜகவின் விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். கட்சியைவிடப் மேலானவா்கள் யாரும் கிடையாது. ஜனநாயகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற எண்ணிக்கைதான் முக்கிய பங்காற்றுகிறது. நாங்களும் அதைப் பெறத்தான் போராடி வருகிறோம் என்றாா் அவா்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தலைவா்கள் பலா் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் தொடா்ந்து தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனா். குறிப்பாக, திரிணமூல் காங்கிரஸின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரி, மேலும் அக்கட்சியின் 14 எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT