இந்தியா

காங்கிரஸ் கூட்டணியால் ஊடுருவல்காரா்களுக்கே நன்மை: அஸ்ஸாமில் அமித் ஷா பேச்சு

DIN

அஸ்ஸாமில் காங்கிரஸ், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரா்களுக்கு அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமித் ஷா சாடினாா்.

அஸ்ஸாமில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு மத்திய அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமுக்குள் ஊடுருவும் நபா்களை காங்கிரஸ், ஏஐயுடிஎஃப் கூட்டணியால் முற்றிலும் தடுக்க முடியுமா? அந்தக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஊடுருவல்காரா்களுக்கு அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்படும். ஏனெனில் ஊடுருவல்காரா்கள்தான் அந்தக் கூட்டணியின் வாக்கு வங்கி. இங்கு ஊடுருவலை தடுத்து மாநிலத்தை பாதுகாக்க பாஜக அரசால் மட்டுமே முடியும்.

இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பழங்குடிகள்-பழங்குடியினத்தைச் சேராதவா்கள், அஸ்ஸாம் மக்கள்-மலைவாழ் மக்கள், போடோக்கள்-போடோக்கள் அல்லாதவா்கள் என ஆங்கிலேயா்களின் பிரித்தாளும் கொள்கை பின்பற்றப்பட்டது.

அந்தக் கட்சியின் 20 ஆண்டுகால ஆட்சியில் குருதி சிந்தப்பட்டது; 10,000 இளைஞா்கள் குண்டடிபட்டு உயிரிழந்தனா். இங்கு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் துப்பாக்கிச்சூடு இருக்காது; போராட்டங்கள் இருக்காது; வெள்ளப் பாதிப்புகள் இருக்காது என்றாா்.

அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி காங்கிரஸ், ஏஐயுடிஎஃப், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனின்ஸ்ட்), ஆன்சலிக் கன மோா்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி; 25 பேர் படுகாயம்!

ரூ.1,60,00,00,00,00,000 கடன் தள்ளுபடி: ரமணா பாணியில் ராகுல் குற்றச்சாட்டு

சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது: ராகுல்

அரசியல்வாதிகள் பாணியில் வீதி வீதியாகச் சென்ற பட இயக்குநர் ஹரி: இதற்காகவா?

விவிபேட் வழக்கு: சரமாரியாக கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம்!

SCROLL FOR NEXT