இந்தியா

'சவாலை வாய்ப்பாக மாற்றியுள்ளீர்கள்' - பால புரஸ்கார் விருது பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

DIN

இந்த ஆண்டுக்கான பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருதை மும்பையைச் சேர்ந்த மலையேறுபவர் காம்யா கார்த்திகேயன் பெற்றுள்ளார்.

இதுகுறித்த விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்றுப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு தெரிவித்தார். 

விருது பெற்ற காம்யா இதுகுறித்து, 'நான் கரோனா பேரிடர் காலத்திலும் தொடர்ந்து பயிற்சி பெற்றேன். 2021 ஆம் ஆண்டில் நான் வட அமெரிக்காவில் உள்ள மவுண்ட் தெனாலி மலை ஏறுவேன். தற்போது, ​​குல்மார்க்கில் எனது அடுத்த மலையேறுதலுக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன்' என்று பிரதமரிடம் தெரிவித்தார். 

அவருக்கு பதிலளித்த பிரதமர் மோடி, 'நீங்கள் சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றி சாதித்துக் காட்டியுள்ளீர்' என்று தெரிவித்தார். 

முன்னதாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கரோனாவுக்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் குழந்தைகள் முக்கிய பங்கு வகித்ததாக குறிப்பிட்டிருந்தார். 

இன்று நடைபெற்ற காணொலி நிகழ்ச்சியில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் கலந்து கொண்டார்.

கல்விசார் சாதனைகள், விளையாட்டு, கலை மற்றும் கலாசாரம், சமூக சேவை மற்றும் துணிச்சல் ஆகிய துறைகளில்  சாதனை புரியும் குழந்தைகளுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால புரஸ்காரின் கீழ் பால சக்தி புரஸ்கார் விருதை இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு, பால சக்தி புரஸ்காரின் பல்வேறு பிரிவுகளின் கீழ் நாடு முழுவதும் இருந்து 32 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

SCROLL FOR NEXT