இந்தியா

அதிதீவிர பக்தி: பெற்ற இரு பெண்களை பலி கொடுத்த கொடுமை

25th Jan 2021 02:40 PM

ADVERTISEMENT

ஆந்திரத்தில் அதி தீவிர பக்தி காரணமாக படித்த பெற்றோரோ இரு பெண்களை பலி கொடுத்த கொடுமை அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், மதனபள்ளியில் உள்ள சிவாநகரில் வசித்து வருபவர் புருஷோத்தம் நாயுடு, பத்மஜா. புருஷோத்தம் நாயுடு பெண்கள் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறார். பத்மஜா தனியார் பள்ளியின் தாளாளராக உள்ளார். அவர் தங்க பதக்கம் பெற்றவர். அவர்களுக்கு அலேக்யா(27), சாய் திவ்யா(22). அலேக்யா போபாலில் பட்ட மேற்படிப்பு படித்து வருகிறார்.  சாய் திவ்யா எம்பிஏ முடித்து ஏ.ஆர்.ரகுமான் இசை கல்லூரியில் இசை பயின்று வருகிறார்.

 இவர்கள் அனைவரும் சிவாநகரில் கட்டிய புதிய வீட்டில் கடந்தாண்டு ஆக. மாதம் முதல் வசித்து வருகின்றனர். தங்கள் வீட்டில் அற்புதங்கள் நடக்க வேண்டும் என்று எப்போதும் பூஜைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை தன் இரு பெண்களை அழைத்து பூஜைகள் குறித்து பெற்றோர் விவரித்து உள்ளனர். அன்று காலை அவர்களை வீட்டை சுற்றி வலம் வர செய்துள்ளனர். பின்னர் அவர்களை பூஜை அறையில் வைத்து பலி பூஜைக்கான உடைகளை அணிவித்து அங்கு சக்கரங்கள் வரைந்து பூஜை செய்துள்ளனர்.

ADVERTISEMENT

பின்னர் தன் இளைய மகளை சூலாயுதத்தால் குத்தி உள்ளனர். மூத்த மகளின் வாயில் செப்பினால் ஆன சொம்பை சொருகி அவளை டம்பள்சால் அடித்து அடித்து சாகடித்துள்ளனர். இருவரும் உயிருக்கு போராடிய நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உயிரை விடுத்துள்ளனர். பூஜைகள் நிறைவு பெற்ற பின்னர் புருஷோத்தம் தன் நண்பருக்கு தகவல் தெரிவித்து வர செய்துள்ளார். அவரும் தன்னுடன் 3 பேரை அழைத்து வரும் போது புருஷோத்தம் தன் கையில் வேப்பிலையுடன் வாயிலில் நின்று கொண்டு தன் மனைவி இரு பெண்களை அடித்து கொன்றுவிட்டாள் என்று கூறியுள்ளார். 

அவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கவும் மறுதுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து புகார் பெற்ற போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பெற்றோரை கைது செய்து பெண்களின் சடலங்களை பூஜை அறையிலிருந்து மீட்டனர். அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். கைதான இருவரும் திங்கள்கிழமை முதல் சத்யயுகம் பிறக்க போகிறது. தன் பெண்கள் உயிருடன் வருவார்கள். அதனால் திங்கள் காலை வரை பொறுத்திருக்க வேண்டும் என்று பலமுறை மன்றாடினர். 

இதுகுறித்து மதனபள்ளி டிஎஸ்பி ரவி மனோகராசாரி கூறியதாவது, 'கைதான இருவரும் மெத்த படித்த மேதாவிகள். மந்திர தந்திரங்களில் அதி தீவிர நம்பிகை கொண்ட அவர்களின் மனநிலை சிறிது பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தங்கள் பெண்கள் மீண்டும் உயிருடன் திரும்பி வருவார்கள் என்று எண்ணி கொலை செய்ததாக திரும்ப திரும்ப கூறுகின்றனர். தாய் பத்மஜா கொலை செய்த போது தந்தை புருஷோத்தமும் அருகில் இருந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அடுத்த கட்ட விசாரணையின் போது முழு தகவலும் வெளியிடப்படும்.

பெற்றோர்களின் மனநிலையும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தகுந்த பாதுகாப்புடன் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்’, என்று கூறினார்.
 

Tags : Andhra
ADVERTISEMENT
ADVERTISEMENT