இந்தியா

கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: மத்திய உள்துறை

25th Jan 2021 04:56 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை எச்சரித்துள்ளது.

உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ள கரோனா தொற்றினைத் தடுக்க உலகில் பல நாடுகள் தடுப்பூசியினைக் கண்டறிந்து பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலை மற்றும் அஸ்ட்ரா சனேகா நிறுவனத்துடன், புணேவிலுள்ள சீரம் ஆய்வகத்தின் கூட்டுத்தயாரிப்பில் ‘கோவிஷீல்ட்’ என்னும் தடுப்பூசியும், ஐதராபாத்திலுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் உள்நாட்டுத் தயாரிப்பான ‘கோவாக்சின்’ என்னும் தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கடந்த 16-ஆம் தேதி முதல் இவை இரண்டும் நாடு முழுவதும் முன்கள சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட முதன்மை தேர்வாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம் கரோனா தடுப்பூசிகளால் உடல்நலக்குறைவு ஏற்படுவதாகவும், மரணங்கள் நேர்வதாகவும் சிலர் தகவலைப் பரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும் அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் திங்களன்று வெளியிட்டுள்ள தகவலில், ‘கரோனா தடுப்பூசி குறித்து வதந்தி மற்றும்  அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பயன்பாட்டில் உள்ள இரண்டு தடுப்பூசிகளுமே இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பாதுகாப்பானவை என உறுதி செய்யப்பட்டிருக்கிறது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT