இந்தியா

திரும்பப் பெறப்படுகிறதா பழைய வரிசை ரூபாய் நோட்டுகள்?: ரிசர்வ் வங்கி விளக்கம்

25th Jan 2021 04:17 PM

ADVERTISEMENT

 

மும்பை: பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

கடந்த ஆம் ஆண்டு நடைபெற்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு கட்டுபடுத்தப்பட்டு, அதன் அச்சடிப்பு பணிகள் முழுமையாக நிறுத்தப்படுவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.

தற்போது 100, 10 மற்றும் 5 ரூபாய் நோட்டுகளில் பழைய வரிசை நோட்டுகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெறப் போவதாக ஒரு பிரிவு ஊடகங்களில் திங்களன்று தகவல் வெளியானது.

ADVERTISEMENT

இந்நிலையில் பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுகிறதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், ‘100, 10, 5 ரூபாயின் பழைய வரிசை நோட்டுகளை திரும்பப் பெறப் போவதாக வெளியான தகவல் தவறானது என்றும், பழைய வரிசை ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் திட்டம் ஏதும் இல்லை’ என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT