இந்தியா

வேளாண் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள சிறு தொழில்கள் நசுக்கப்படும்: ராகுல் குற்றச்சாட்டு

DIN

வேளாண் சட்டத்தால் நாடு முழுவதும் உள்ள சிறு தொழில்கள் நசுக்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார். 

கரூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை வருகை தந்த ராகுல்காந்தி, கரூர் அருகே வாங்கல், மாரிகவுண்டம்பாளையம் கிராம தென்னந்தோப்பு வளாகத்தில் குழுமியிருந்த விவசாயிகளிடம் கலந்துரையாடினார். 

அப்போது அவர் பேசியதாவது: 

மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமைகளை இழைத்து வருகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் மிகவும் கடினமான காரியமாக உள்ளது. விவசாயி வாழ்க்கை மிகக் கொடூரமாக மாறிக்கொண்டிருக்கிறது.

தில்லியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பாஜக விவசாயத்தின் அடிப்படையையும் விவசாயத்தையும் தகர்க்கக்கூடிய கொள்கை முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறது.

நான் இன்று உங்களை சந்திப்பதின் நோக்கம் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் உள்ள பிரச்னையை நான் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் தில்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கக்கூடிய விவசாயிகளின் போராட்டமும் , அதில் உள்ள கஷ்டத்தை நான் உங்களோடு பகிர்ந்துகொள்ளப் போகிறேன் என்றார்.

தொடர்ந்து, பெண் விவசாயி வெண்ணிலா பேசுகையில், உழைப்பை போட்டாலும் உழைப்பின் இறுதியில் எங்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானம் என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது என்றார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, விவசாயிகளுக்கு முழுமையான தகவல்கள் வந்து சேர்வது இல்லை. ஏனென்றால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு விவசாயிகளுக்கு உரிய செய்திகளை கொண்டு வந்து சேர்க்க அவர்கள் தயாராக இல்லை. அதை மறைக்க முயலுகின்றனர் என்றார். 

வேளாண் குறித்து பேசிய விவசாயி ஒருவரை பாராட்டி மத்திய வேளாண் அமைச்சரைவிட நீங்கள் சிறந்த வேளாண் அமைச்சராக இருப்பீர்கள் என்று தெரிவித்தார்.

'மண்டி என்ற அமைப்பை முதலில் ஒழிக்க வேண்டும் என்பதுதான் முதல் சட்டம். இரண்டாவது கண்டிப்பாக ஒப்பந்தத்தை போட்டுக்கொண்டு நீங்கள் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறீர்களோ அந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களால் நீதிமன்றம் செல்ல முடியாது. மூன்றாவதாக, பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம்' என மூன்று வேளாண் சட்டங்களின் அம்சங்களை எடுத்துரைத்தார். 

எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த உற்பத்திப் பொருளுக்கு வேண்டுமானால் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்க முடியும். இந்த சட்டத்தால் பல கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல தொழில்கள் நசுக்கப்படும்.

கூட்டத்தில் எழுந்து நின்ற ஒரு விவசாயி அவர் கையில் வைத்திருந்த பழைய ஐநூறு ரூபாய் நோட்டை ராகுல் காந்தியுடன் காட்டிய போது அந்த விவசாயிடம் இருந்ததை காட்டி, மத்திய அரசு இவரது 500 ரூபாயை திருடிக் கொண்டுள்ளது என்றார். 

ஜிஎஸ்டி வரி குறித்து கேள்வி எழுப்பிய ராகுலுக்கு, 'சாப்பாட்டுக்குக் கூட வரி அதிகமாக செலுத்த வேண்டியிருக்கிறது' என்று மக்கள் தெரிவித்தனர். 

ஆங்கிலேயர்கள் 1885இல் பயன்படுத்திய தந்தி என்கிற சட்டத்தின் மூலம் நிலத்தை கையகப்படுத்துகிறார்கள், அதன் மூலம் கேஸ் குழாய் பதிப்பது எரிவாயு குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்த கோபுரங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து செய்து வருகிறது. இது தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து இதே நிலையை கடைப்பிடிக்கிறது என்று விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.

2013ல் கொண்டு வந்த நில கையகப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. கடந்த முறை காங்கிரஸ் ஒரு சிறந்த திட்டத்தை தேர்தல் பிரசாரத்தில் அறிவித்திருந்தது.

100 நாள் வேலைத்திட்டம் போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் கொண்டு வந்தது. அதுவும் வறுமையில் இருக்கக் கூடியவர்களை கண்டறிந்து அவர்களை நேரடியாக பணத்தை அவருடைய வங்கிக் கணக்கில் போடுவது அதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கம் மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 72 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாள் வேலைவாய்ப்பு போலவே அவர்களுக்கும் அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மிக தெளிவாக நாங்கள் வகுத்து இருந்தோம் என்று ராகுல் கூறினார். 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தொடர்ந்து அரசு முயற்சி செய்து வருகிறது அதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் தொடர வேண்டும். நீங்கள் தொடர்ந்து காங்கிரசோடு இணைந்து இருங்கள். நல்ல காலம் பிறக்கும், நீங்களும் உழையுங்கள், நாங்களும் உழைக்கிறோம் என்று தன்னுடைய பேச்சை ராகுல்காந்தி நிறைவு செய்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திற்பரப்பு அருவி நீச்சல் குளத்தில் மூழ்கி பிளஸ் 2 தோ்வெழுதிய மாணவா் பலி

தீரா் சத்தியமூா்த்தி நினைவு நாள்

புதுகையில் ஆட்சியரகம் முன்பு கருகிய நெற்பயிா்களைக் கொட்டி போராட்டம்

திருச்சி தொகுதி தோ்தல் பாா்வையாளா் புதுக்கோட்டையில் ஆய்வு

கந்தா்வகோட்டை பள்ளியில் நலக் கல்வி மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT