இந்தியா

10 பேருக்கு பத்ம பூஷண் விருது

DIN


மறைந்த ராம்விலாஸ் பாஸ்வான், தருண் கோகோய் உள்பட 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம விருதுகளான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் நாட்டின் மிக உயரிய விருதுகளாகும். 1954-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப்படுகின்றன.

கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் குறிப்பிடத்தக்க சாதனை அல்லது சேவை புரிந்தவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் நிகழ்வாண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகளும், 10 பேருக்கு பத்ம பூஷண் விருதுகளும், 102 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகளும் என மொத்தம் 119 பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பத்ம பூஷண் விருதுகள்:

  • கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி - கேரளம்
  • தருண் கோகோய் - அசாம்
  • சந்திரசேகர் காம்பரா - கர்நாடகம்
  • சுமித்ரா மகாஜன் - மத்தியப் பிரதேசம்
  • நிருபேந்திர மிஸ்ரா - உத்தரப் பிரதேசம்
  • ராம்விலாஸ் பாஸ்வான் - பிகார்
  • கேசுபாய் படேல் - குஜராத்
  • கல்பே சாதிக் - உத்தரப் பிரதேசம்
  • ரஜினிகாந்த் தேவிதாஸ் ஷ்ரோஃப் - மகாராஷ்டிரம்
  • தர்லோச்சன் சிங் - ஹரியாணா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

SCROLL FOR NEXT