இந்தியா

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

DIN

சிக்கிம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து, இரு நாடுகளிடையே அப்போது முதல் மோதல் போக்கு நடைபெற்று வருகிறது. இரு நாடுகள் சாா்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இந்தியா, சீனா நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இரண்டரை மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை 9 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்த நிலையில் சிக்கிம் எல்லையில் நகுலா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சீன வீரர்கள் இந்திய எல்லையில் ஊடுருவ முயற்சி செய்ததாகவும், இந்த ஊடுருவல் முயற்சியை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இரு நாட்டு வீரர்களிடையே நடந்த இந்த மோதலில் சீன வீரர்கள் 20 பேர் வரையில் காயமுற்றுள்ளதாகவும் தகவல்கள். தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT