இந்தியா

நாடாளுமன்றம் நோக்கி பிப்.1-இல் விவசாயிகள் பேரணி

DIN


புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக தில்லியில் போராடும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த நவம்பர் முதல் தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தன்று தில்லியில் மாபெரும் டிராக்டர் பேரணியை நடத்தவுள்ளனர்.

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் (பிப்ரவரி 1) நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர்.

சிங்கு எல்லையில் இன்று (திங்கள்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த கிராந்திகாரி விவசாயிகள் சங்கத் தலைவர் தர்ஷன் பால் இதுகுறித்து பேசியது:

"பிப்ரவரி 1-ம் தேதி பல்வேறு பகுதிகளிலிருந்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தவுள்ளோம். இந்தப் போராட்டம் ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலங்களுக்குட்பட்டதாக அல்லாமல் ஒட்டுமொத்த நாட்டின் போராட்டம் என்பதையும் எங்களது பலத்தையும் நாளைய டிராக்டர் பேரணி அரசுக்கு உணர்த்தும். 

டிராக்டர் பேரணிக்கு வந்தவர்கள் திரும்பப் போகமாட்டார்கள். போராட்டத்தில் பங்கெடுக்கவுள்ளார்கள். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். எங்களுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை.

அனைத்துப் போராட்டங்களும் பேரணிகளும் அமைதி வழியிலேயே நடைபெறும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT