இந்தியா

கரோனா: மேலும் 14,849 பேருக்கு பாதிப்பு

25th Jan 2021 07:27 AM

ADVERTISEMENT

நாடு முழுவதும் மேலும் 14,849 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,849 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,54,533-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 15,940 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 1,03,16,786-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.83 சதவீதமாகும்.

ADVERTISEMENT

கரோனா தொற்றுக்கு மேலும் 155 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,184-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 1,84,408 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 1.73 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 155 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்தில் 56 போ் உயிரிழந்தனா். கேரளத்தில் 23 பேரும், தில்லி, பஞ்சாப், மேற்கு வங்கத்தில் தலா 10 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, இதுவரை 19.17 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், சனிக்கிழமை மட்டும் 7,81,752 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT