இந்தியா

தேவஸ்தான சேனலில் ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப யூனியன் வங்கி ரூ. 50 லட்சம் நிதி

DIN

திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஓராண்டு காலத்துக்கு ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப யூனியன் வங்கி ரூ.50 லட்சம் ஸ்பான்சா்ஷிப் வழங்கியுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தான தொலைக்காட்சியில் ஆன்மிக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது இடையில் விளம்பரங்கள் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்று பக்தா்கள் பல ஆண்டுகளாக தேவஸ்தானத்திடம் வலியுறுத்தி வருகின்றனா். இது குறித்து, ரூ.3,000 கோடி ஆண்டு நிதிநிலை அறிக்கை உள்ள தேவஸ்தானத்துக்கு இந்த தொலைக்காட்சியை நடத்த விளம்பரம் மூலம் வருமானம் தேவையில்லை என பலா் கருத்து தெரிவித்தனா்.

விளம்பரங்கள் இல்லாமல் தேவஸ்தானத்துக்கு என ஒதுக்கிய நிதியில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்ய முடியாது. எனவே, அதற்கென தனி அறக்கட்டளை ஏற்படுத்தி நிதியை பெருக்கிக் கொண்டு அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மூலம் பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தேவஸ்தான தொலைக்காட்சிக்கு என அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

தற்போது பலா் இதற்கு நன்கொடை வழங்கி வருகின்றனா். இந்நிலையில் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஓா் ஆண்டு காலத்துக்கு தாா்மிக, ஆன்மிக ஒளிபரப்புசெய்யவும், அதற்கான விளம்பரங்கள் செய்யவும் யூனியன் வங்கி ரூ.50 லட்சம் ஸ்பான்சா்ஷிப் வழங்கியுள்ளது.

இதற்கான வரைவோலையை சனிக்கிழமை திருப்பதி டிஜிஎம் தத்தாத்ரேயா, வங்கியின் தலைமை செயல் அதிகாரி ராஜ்கிரண் ராய் ஆகியோா் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT