இந்தியா

'எரிவாயு-டீசல்-பெட்ரோல்(ஜிடிபி) விலையில் மோடி அரசின் மிகப்பெரிய வளர்ச்சி' - ராகுல் காந்தி

24th Jan 2021 11:19 AM

ADVERTISEMENT

எரிவாயு-டீசல்-பெட்ரோல் விலையில் பிரதமர் மோடி மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

எரிபொருள் விலை உயர்வு கண்டித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டர் பக்கத்தில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

இதுகுறித்து அவர், 'பிரதமர் மோடி 'ஜிடிபி'யில் அதிக வளர்ச்சியைக் காட்டியுள்ளார். அதாவது 'ஜிடிபி' என்பது எரிவாயு-டீசல்-பெட்ரோல் (gas-diesel-petrol price) விலையில் மிகப்பெரிய வளர்ச்சியைக் காட்டியுள்ளார். 

பொதுமக்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மோடி அரசோ வரி வசூலில் பிஸியாக உள்ளது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

ADVERTISEMENT

 

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 88.38 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 81.23 ஆகவும் உள்ளது.
 

Tags : Rahul Gandhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT