இந்தியா

தேசிய பெண் குழந்தைகள் தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

24th Jan 2021 04:47 PM

ADVERTISEMENT

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரை செய்தியில், ‘‘ தேசிய பெண் குழந்தைகள் தினத்தன்று,  பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் நம் நாட்டு திருமகள்களுக்கு வணக்கம் செலுத்துகிறோம்.

பெண் குழந்தைகளுக்கு அதிகாரம், போதியக் கல்வி, நல்ல சுகாதாரம், பாலின பாகுபாடற்ற அக்கறை ஆகியவற்றை வழங்க மத்திய‌ அரசு பல்வேறு நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது.’’ இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

2008 ஆம் ஆண்டு முதல் ஜனவரி 24 ஆம் தேதி தேசிய பெண் குழந்தை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : PMMODI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT