இந்தியா

ஜார்கண்டில் பறவைக் காய்ச்சல் இல்லை: சுகாதாரத்துறை

24th Jan 2021 11:20 AM

ADVERTISEMENT

ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுக்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தில்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 12 மாநிலங்களில் பறவைக் காயச்சல் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் இதுவரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மாநிலத்தில் இறந்த பறவைகள், பூங்கா மற்றும் காட்டில் உயிருடன் உள்ள பறவைகளின் மாதிரிகள் ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதுவரை 4,353 பறவைகளின் மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில், பறவைக் காய்ச்சல் உறுதியாகவில்லை என்று விலங்குகள் நலத்துறையும் தெரிவித்துள்ளது.

Tags : bird flu
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT