இந்தியா

டிராக்டர் பேரணி: தில்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

24th Jan 2021 12:30 PM

ADVERTISEMENT

டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான விவசாயிகள் தில்லி நோக்கி வருகைதந்துகொண்டிருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

குடியரசு நாளன்று திட்டமிட்டபடி தில்லி வெளிவட்டச் சாலையில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தில்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

தில்லியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகக் காணப்படும் வெளிவட்டச் சாலையில் டிராக்டா் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் அறிவித்தனா். 

ஆனால், அந்த வழிக்குப் பதிலாக கண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுச் சாலை வழியாக டிராக்டா் பேரணியை நடத்துமாறு தில்லி உள்பட 3 மாநிலங்களின் காவல்துறை அதிகாரிகள், விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.

பேரணி நடத்துவது தொடா்பாக, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தில்லி, ஹரியாணா, உத்தர பிரதேச மாநில காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. 

எனினும், காவல் துறையினரின் கோரிக்கையை விவசாயிகள் ஏற்க மறுத்தனா். தில்லிக்குள் டிராக்டா் பேரணியை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக அவா்கள் தெரிவித்தனா். 

இந்நிலையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் இடையே சனிக்கிழமை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளதாக பஞ்சாப் கிஷன் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த சதனம் சிங் பனு தெரிவித்துள்ளார். மேலும் தில்லி வெளிவட்டச் சாலையில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
 

Tags : விவசாயிகள் Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT