இந்தியா

தில்லி: சிறைத்துறை மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா தடுப்பூசி

24th Jan 2021 03:18 PM

ADVERTISEMENT

தில்லியில் சிறைத்துறையை சேர்ந்த மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டது.

தில்லி சிறைத்துறையில் பணியாற்றி வரும் மருத்துவ ஊழியகளில் இதுவரை 60 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் தில்லியில் இன்று (ஜன. 24) சிறைத்துறையை சேர்ந்த மருத்துவ பணியாளர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்ட்டுள்ளது.

ADVERTISEMENT

தில்லி சிறைத்துறையில் 200 மருத்துவப் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதுவரை 60 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தில்லி சிறைத்துறையில் அதிகாரிகள் உள்பட 3,600 பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர். தில்லியைச் சேர்ந்த 1,600 பேரும், தமிழகத்தை சேர்ந்த 1000 பேர் திகார் சிறையில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர். மேலும் 1,000 துணை ராணுவப் படையினரும் பணியாற்றி வருகின்றானர்.

இதில் 292 சிறைத்துறையை சேர்ந்த காவலர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Delhi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT