இந்தியா

நாட்டில் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி

24th Jan 2021 11:47 AM

ADVERTISEMENT

நாட்டில் இதுவரை 15.82 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தடுப்பூசி செலுத்தத் தொடங்கிய 6 நாள்களில் 10 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வயது மூத்தோர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. கரோனா தடுப்பு மருந்து செலுத்தத் தொடங்கி 8 நாள்களான நிலையில் இதுவரை 15,82,201 லட்சம் கரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT