இந்தியா

காங்கிரஸ் தான் நேதாஜியைக் கொன்றது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை

24th Jan 2021 06:59 PM

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சி தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸைக் கொன்றது என்று பாஜகவை எம்.பி. சாக்‌ஷி மஹாராஜ் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேதாஜியின் மரணத்திற்கு காங்கிரஸ் கட்சிதான் பொறுப்பு. இது என்னுடைய கனிப்பு மட்டுமே என்றாலும், இதனைத் தான் நான் நம்புகிறேன். இது உண்மைக்கு புறம்பாகவும் இருக்கலாம்.  

சுபாஷ் சந்திர போஸ் நாட்டின் மிகச்சிறந்த விடுதலைப் போராட்ட வீரராக உள்ளார். ஆனால் அவரது மரணம் மர்மமாகவே இருப்பது ஏன்?.

அவரது மரணம் தொடர்பாக நேரு விசாரணை நடத்தாதது ஏன்?. அவரது மரணம் தொடர்பான உண்மை வெளிவரவேண்டும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பாஜக எம்.பி.யின் இத்தகைய பேச்சு காங்கிரஸ் தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : பாஜக Unnao
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT