இந்தியா

தில்லியில் மேலும் 185 பேருக்கு கரோனா

24th Jan 2021 04:15 PM

ADVERTISEMENT


தில்லியில் புதிதாக 185 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் நோய்த் தொற்றால் பலியாகியுள்ளனர். 

அங்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் விகிதம் 0.30 சதவிகிதமாக உள்ளது. இதுவே சனிக்கிழமை 0.26 சதவிகிதமாக இருந்தது.

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,33,924 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 10,808 ஆக உள்ளது. இன்னும் 1,741 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜனவரி 1-ம் தேதி 585 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை இன்று 185 ஆக குறைந்துள்ளது. கடந்த திங்கள்கிழமை 161 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 9 மாதங்களில் அதுவே குறைந்தபட்ச ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கையாகும்.

ADVERTISEMENT

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT