இந்தியா

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற தயக்கம் ஏன்? பஞ்சாப் முதல்வர் கேள்வி

23rd Jan 2021 04:23 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மத்திய அரசு தயங்குவது ஏன் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 60 நாள்களாக தில்லி எல்லைகளில் போராடி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கைவிடுவது தொடர்பாக  மத்திய அரசு, விவசாய சங்கங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை தில்லியில் நடைபெற்ற 11-ஆம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளார். 

ADVERTISEMENT

“வேளாண் பட்டியல் மாநில அரசின் பட்டியலின்கீழ் வரும்நிலையில் மத்திய அரசு இதில் தலையிடுகிறது. வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு ஏன் தயங்குகிறது? இது மனிதாபிமானமற்றது” என அமரீந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்

Tags : Farmers protest
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT