இந்தியா

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஆக உயர்வு

23rd Jan 2021 04:47 PM

ADVERTISEMENT

நாட்டில் புதியவகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டில் புதியவகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150ஆக அதிகரித்துள்ளது.

புதிய வகை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த மாநில அரசுகளால் தனித்தனி அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கரோனா, இந்தியாவைப் போன்றே டென்மார்க், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஸ்வீடன், பிரான்ஸ், ஸ்பெயின், ஸ்விட்சர்லாந்து, ஜெர்மனி, கனடா, ஜப்பான், லெபனான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags : Corona virus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT