இந்தியா

நாட்டிற்கு ஒரே ஒரு தலைநகர்தான் இருக்க வேண்டுமா? மம்தா பானர்ஜி

23rd Jan 2021 05:09 PM

ADVERTISEMENT

நாட்டிற்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்களை அமைத்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்த உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியைத் தொடக்கி வைத்து பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், நாட்டு விடுதலைக்கானப் போரில் மேற்கு வங்கம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பங்குபெற்றுள்ளன. அப்படியிருக்கையில் நாட்டிற்கு ஒரு தலைநகர் மட்டும் ஏன் இருக்க வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பினார்.

சுழற்சி முறையில் நாட்டின் வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தென்பகுதி மாநிலங்களில் தலைநகர் அமைக்கப்பட வேண்டும் எனவும் இதுதொடர்பாக திரிணமூல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசை வலியுறுத்துவார்கள் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்த மம்தா பானர்ஜி திரிணமூல் அரசு நேதாஜி பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவதாகவும் தேர்தலை மனதில் வைத்து மட்டும் கொண்டாடுவதில்லை என அவர் தெரிவித்தார்.

Tags : west bengal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT