இந்தியா

சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா பாதிப்பு உறுதி

23rd Jan 2021 02:42 PM

ADVERTISEMENT


பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அவருடன் இருந்த சசிகலாவுக்கு கரோனா பாதித்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இளவரசிக்கு ஆர்டி-பிசிஆர் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கும் கரோனா பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 20-ஆம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், அவருடன் சிறையில் ஒரே அறையில் தங்கியிருந்த அவரது உறவினர் இளவரசிக்கும் கரோனா பாதித்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், அவருக்கும் கரோனா பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுளள்து. இதையடுத்து இளவரசியும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.

சசிகலாவுக்கு மூச்சுத்திணறல் மற்றும் காய்ச்சல் காரணமாக, ஜனவரி 20-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

பெங்களூரு, விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட வி.கே. சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்து தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருத்துவமனையின் மூத்த மருத்துவா்கள் கொண்ட குழு, சசிகலாவின் உடல்நிலையை தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கெனவே நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, ஹைபோ தைராடிசம் பிரச்னைகள் உள்ளதால் சசிகலாவை தனியாா் மருத்துவமனைக்கு மாற்றுமாறு அவரது உறவினா்கள் விடுத்த கோரிக்கையை சிறைத் துறை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனா். அவா் இன்னும் சிறைக் கைதியாக உள்ளதால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என சிறைத் துறை அதிகாரிகள் விளக்கமளித்திருந்தனர்.

இந்த நிலையில், சசிகலாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.
 

Tags : BENGALURU sasikala jail
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT