இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா

23rd Jan 2021 07:51 PM

ADVERTISEMENT

கேரளத்தில் இன்று மேலும் 6,960 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் 61,066 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் புதிதாக 6,960 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
இதன்மூலம் மொத்த பாதிப்பு பண்ணிக்கை 8,83,540ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 72,048 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாவுக்கு இன்று மேலும் 23 பேர் பலியானார்கள். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 3,587ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவிலிருந்து இன்று 5,283 பேர் குணமடைந்தனர். இதுவரை 8,08,377 பேர் குணமடைந்துள்ளனர். 2,11,824 கண்காணிப்பில் உள்ளனர். 407 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT