இந்தியா

ஜம்முவில் கடும் பனிப்பொழிவு, மழை: மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கம்

23rd Jan 2021 12:19 PM

ADVERTISEMENT

 

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் கடும் பனிப்பொழிவோடு, மழையும் பெய்து வருவதால், கடும் குளிர் நிலவி வருகின்றது.

பள்ளத்தாக்கு முழுவதும் உறைபனிக்கும் கீழே பல டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறைந்துள்ளதால் குறைந்த வெப்பநிலை நிலவிவருவதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

ஜம்மு சமவெளிகளில் கடும் பனியோடு, மழை பெய்து வருவதால், பள்ளத்தாக்கில் உள்ள பெரும்பாலான மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

ஜம்மு சமவெளியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், காஷ்மீர் மற்றும் ஜம்மு மலைப்பகுதிகளில் அதிகப்படியான பனிப்பொழிவு நிலவும் என்றும், நாளை முதல் வானிலை சற்று மேம்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

கடுமையான குளிர்காலத்தின் 40 நாள் நீண்ட காலமான 'சில்லாய் கலான்' ஜனவரி 31-ஆம் தேதியோடு முடிவடைகின்றது. அதுவரை பனிமூட்டம் ஏறக்குறைய இருக்கும் என்று வானிலை ஆய்வுமைய அதிகாரி தெரிவித்துள்ளார்.  

ஸ்ரீநகரில் மைனஸ் 2 டிகிரி செல்சியஸாகவும், பஹல்காமில் மைனஸ் 1.3 மற்றும் குல்மார்க்கில் மைனஸ் 4.8 ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாகப் பதிவாகியுள்ளது. 

லடாக்கின் லே பகுதியில் மைனஸ் 10.1 ஆகவும், கார்கில் மைனஸ் 17.6, டிராஸ் மைனஸ் 5.6 ஆகவும், ஜம்மு நகரம் 10.3, கத்ரா 9.3, படோட் 4.0, பன்னிஹால் 1.2 மற்றும் படேர்வா 2.1 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags : Jammu and Kashmir
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT