இந்தியா

ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கை வெளியீடு

23rd Jan 2021 12:46 PM

ADVERTISEMENT


அமராவதி: ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்தின் முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த முதல் கட்ட தேர்தல் 11 மாவட்டங்களுக்கு உள்பட 146 வருவாய் மண்டலங்களில் நடைபெற உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் நிம்மகட்டா ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்வது மாநில அரசின் கடமை என்றும், தேர்தல் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் ஆளுநருக்கு தகவல் அளிப்போம் என்றும் ரமேஷ் குமார் கூறியுள்ளார்.

முதல்கட்டமாக, ஆந்திர மாநில கிராமப் பஞ்சாயத்துத் தேர்தல் விசயநகரம் மற்றும் பிரகாசம் மாவட்டங்களைத் தவிர்த்து மீதமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

ADVERTISEMENT

Tags : andhra State Election Commission
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT