இந்தியா

நேதாஜி பிறந்தநாள்: பேரணியைத் தொடக்கினார் மம்தா

23rd Jan 2021 02:56 PM

ADVERTISEMENT


நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி தொடங்கியது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணியைத் தொடக்கி வைத்து பங்கேற்றுள்ளார்.

7 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெறும் இந்த பேரணி நேதாஜி சிலையிடம் சென்று நிறைவுபெறுகிறது.

வடக்கு கொல்கத்தாவிற்கு அருகேயுள்ள ஷியாம்பஸார் நகரில் நேதாஜி பிறந்த நேரமான பிற்பகல் 12.15 மணிக்கு பேரணி தொடங்கியது.

ADVERTISEMENT

இது தொடர்பாக பேசிய அவர், தேர்தல் அறிவிக்கப்பட்ட ஆண்டு மட்டும் நாங்கள் நேதாஜியின் பிறந்தநாளை கொண்டாடவில்லை. நேதாஜியின் 125-வது பிறந்தநாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடுகிறோம்.

நேதாஜி நமது நாட்டின் மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரர். அவர் மிகச்சிறந்த தத்துவவாதி என்று குறிப்பிட்டார்.

Tags : நேதாஜி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT