இந்தியா

சோமாலியாவில் ராணுவத் தாக்குதல்: 189 அல் ஷபாப் இயக்கத்தினர் பலி

23rd Jan 2021 05:35 PM

ADVERTISEMENT

சோமாலியா நாட்டில் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் இயக்கத்தினர் மீது நடத்தப்பட்ட ராணுவப்படைத் தாக்குதலில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்பிரிக்க நாடானா சோமாலியாவில் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் பணிகளுக்காக ஆப்பிரிக்க யூனியனின் சார்பில் உகாண்டாவின் அமைதி காக்கும் படைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தலைநகர் மொகாடிஷுவிற்கு அருகே உள்ள சிகாலே, அடிமோல் மற்றும் கெய்டோய் பகுதிகளில் அல் ஷபாப் இயக்கத்திற்கு சொந்தமான இடங்களில் உகாண்டா ராணுவப் படை திடீர் தாக்குதல் நடத்தியது. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.

Tags : somalia
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT