இந்தியா

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா

23rd Jan 2021 09:13 PM

ADVERTISEMENT

மகாராஷ்டிரத்தில் இன்று புதிதாக 2,697 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,697 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 20,06,354 ஆக உயர்ந்துள்ளது. 
கரோனாவுக்கு இன்று 56 பேர் பலியானார்கள். இதையடுத்து பலி எண்ணிக்கை 50,740ஆக உயர்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 3,694 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,10,521ஆக உயர்ந்துள்ளது. 
தற்போது 43,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,13,678 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும் 1,993 பேர் இன்ஸ்ட்டியூட் கண்காணிப்பிலும் உள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT