இந்தியா

மகாராஷ்டிரத்தில் 150 அடி பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது: 5 பேர் பலி, 7 பேர் காயம்

23rd Jan 2021 01:03 PM

ADVERTISEMENT

 

மகாராஷ்டிரத்தின் நந்தூர்பார் மாவட்டத்தில் சனிக்கிழமையன்று 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டோரன்மால் மலைவாசஸ்தலத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கட்கி காட் மலைப்பாதையில் வாகனம் கவிழ்ந்துள்ளது. இன்று காலை 10.30 மணியளவில்  இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில், பலியானவர்கள் நந்தூர்பாரில் உள்ள ஜாபி பாலாய் கிராமத்தில் வசிப்பவர்கள் ஆவார். 

அன்றாட தேவைகளை வாங்குவதற்காக டோரன்மலுக்கு வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால், 150 அடி ஆழப் பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

ADVERTISEMENT

நந்தூர்பரின் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட் கூறுகையில்,
முதல்கட்ட தகவல்களின்படி, ஐந்து பேர் இறந்துள்ளனர், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மீட்பு நடவடிக்கை வேகமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT