கேரள சட்டப் பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வரா ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
கேரளத்தில் இந்த ஆண்டு மே மாதத்துடன் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி காலம் முடிவடைகிறது.
இதனைத் தொடர்ந்து கேரளத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்த பணிகளில் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய யுக்திகள் குறித்து நிர்வாகிகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர் பரமேஸ்வரா திருவனந்தபுரத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ADVERTISEMENT
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிக வலிமையுடன் நாங்கள் ஆட்சியமைப்போம். தேர்தல் யுக்திகள் குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசித்து அதன்படி செயல்படவுள்ளோம் என்று கூறினார்.