இந்தியா

லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்ததால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றம்

23rd Jan 2021 02:25 PM

ADVERTISEMENT

 

ராஞ்சி: ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிகாா் முன்னாள் முதல்வரும் ஆா்ஜேடி கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததால் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ராஷ்ட்ரீய ஜனதாதளம் (ஆா்ஜேடி) கட்சியின் தலைவா் லாலு பிரசாத் யாதவ் கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ராஞ்சி சிறையில் இருந்து வந்தாா். உடல்நலக் குறைவு காரணமாக, அவா் ராஞ்சியிலுள்ள ராஜேந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஆண்டு அவருக்கு கரோனா தொற்று பாதித்து அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், உயர் சிகிச்சைக்காக தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
 

ADVERTISEMENT

Tags : AIIMS lalu prasad RJD
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT