இந்தியா

கரோனா: நாடு முழுவதும் மேலும் 14,256 பேருக்கு தொற்று; 152 பேர் பலி

DIN


கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 14,256 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

சனிக்கிழமை காலை 8 மணி வரை, புதிதாக 14,256 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,06,39,684-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 17,130 போ் குணமடைந்தனா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 10,300,838 -ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 96.82 சதவீதமாகும்.

கரோனா தொற்றுக்கு மேலும் 152 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,53,184-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

நாடு முழுவதும் 1,85,662 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 22-ஆம் தேதி வரை 19,09,85,119 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மட்டும் 8,37,095 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் இதுவரை 13,90,592 சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT