இந்தியா

கரோனா தடுப்பூசி ஏற்றுமதி: இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

23rd Jan 2021 03:52 PM

ADVERTISEMENT

அண்டை நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்தை வழங்கியதற்காக இந்தியாவிற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நட்பு நாடுகளான பூடான், மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஜனவரி 20-ஆம் தேதி முதல் இலவசமாக தடுப்பூசிகளை வழங்கவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

அதன்படி மியான்மர் நாட்டிற்கு நேற்று (ஜன.22) விமானம் மூலம் 15 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. அதற்கு முன்பு வங்கதேசத்திற்கு 20 கோடி கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன. 

மேலும், பூடான், மாலத்தீவு மற்றும் நேபாளம் ஆகிய அண்டை நாடுகளுக்கும் மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை அனுப்பியுள்ளது.

ADVERTISEMENT

மத்திய அரசின் இந்த செயலுக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேயஸ், கரோனாவுக்கு எதிரான போரில் தொடர்ந்து பங்காற்றி வரும் இந்தியா மற்றும் அதன் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

அறிவை பகிர்ந்துகொள்வதன் மூலம் மட்டுமே வைரஸை கட்டுப்படுத்த இயலும். இதன்மூலம் பலரது வாழ்வு மற்றும் வாழ்வாதாரம் காக்கப்படும் என்று கூறினார்.

Tags : WHO
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT