இந்தியா

உலகின் எந்த மூலைக்கும் கரோனா தடுப்பு மருந்தை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது: பிரகாஷ் ஜாவடேகர்

23rd Jan 2021 07:21 PM

ADVERTISEMENT

உலகின் எந்த மூலைக்கும் கரோனா தடுப்பு மருந்தை அனுப்ப இந்தியா தயாராக உள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புணேவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தடுப்பு மருந்து உற்பத்தியில் சீரம் இன்ஸ்டிட்யூட் செய்து வரும் பணியை பாராட்டினார். கரோனா தடுப்பு மருந்தை மாலத்தீவு, பூடான், வங்கதேசம், பிரேசில் உள்பட 12 நாடுகளுக்கு இந்தியா ஏற்கனவே வழங்கி வருகிறது. 
மேலும் பல நாடுகளுக்கு வழங்கவும் தயாராக இருக்கிறது. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை நாம் பூர்த்தி செய்கிறோம். இந்தியாவில் தயாரித்து உலகத்துக்கு வழங்குவதே தற்சார்பு பாரதம் ஆகும். 
சேர்த்து வைத்துக் கொள்வதை விட மற்றவர்களுக்கு வழங்குவதில் தான் அதிக மகிழ்ச்சி உள்ளது. எவ்வளவு கொடுக்கிறோம் என்பதற்கு எல்லையே இல்லை என்றார். 
 

Tags : Prakash Javadekar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT