இந்தியா

முறைகேடான குவாரிகளுக்கு அனுமதியில்லை: கர்நாடக முதல்வர்

23rd Jan 2021 03:24 PM

ADVERTISEMENT

முறைகேடான குவாரிகளுக்கு அனுமதியில்லை என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிவ்மோகா மாவட்டத்தின் ஹுனசோடு பகுதியில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகள் உடைக்கும் இடத்தில் ஜெலட்டின் குச்சிகளுடன் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் வெடித்து கடந்த 21-ம் தேதி விபத்து நேரிட்டது.

இந்த விபத்து தொடர்பாக 5 பேர் உயிரிழந்த நிலையில், கல் குவாரி விபத்து தொடர்பாக அதன் உரிமையாளர் மற்றும் வெடிமருந்து விற்பனையாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முறைகேடான குவாரிகளுக்கு மாநிலத்தில் எங்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிவ்மோகா கல் குவாரி விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை ஆணையர் மற்றும் மக்களவை உறுப்பினர்கள் விபத்து நேரிட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்கள் மூலம் விபத்து குறித்து அறிந்துகொண்டேன். முறைகேடான குவாரிகளை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பாதுகாப்பற்ற எந்த குவாரிகளுக்கும் அனுமதியில்லை. முறைகேடான குவாரிகள் மூலம் கற்களை வெட்டி எடுப்பதன் மூலமே இது போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. முறைகேடான குவாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.

Tags : Karnataka CM
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT