இந்தியா

பெங்களூரு மேற்கு மண்டலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 22 பேருக்கு பக்கவிளைவுகள்

23rd Jan 2021 11:17 AM

ADVERTISEMENT


பெங்களூரு: பெங்களூருவின் மேற்கு மண்டலத்தில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 22 பேருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன.

பெங்களூருவிலேயே மற்ற எந்த மண்டலங்களையும் விட, மேற்கு மண்டலத்தில் தான் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் அதிகமானோருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளது. அதாவது, மற்ற அனைத்து மண்டலங்களிலும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் உடல் நல பாதிப்பு ஏற்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையே 12-ஐ தாண்டாத நிலையில், மேற்கு மண்டலத்தில் மட்டும் 22 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மேற்கு மண்டல சுகாதாரத் துறை அதிகாரி மனோரஞ்சன் ஹெக்டே கூறுகையில், உடல் நலக் குறைவு ஏற்பட்டவர்களுக்கு லேசான பதற்றம், காய்ச்சல், உடல்வெப்ப நிலைக் குறைவு, வலி போன்றவை ஏற்பட்டுள்ளது. ஆனால் யாருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. காய்ச்சல், தலைவலிக்கு மட்டும் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தெற்கு மண்டலத்தில் மட்டும் ஒரே ஒரு பெண்ணுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டதும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சற்று நேரத்தில் அவர் சரியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT

Tags : vaccine coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT