இந்தியா

விவசாயிகளுக்கு ஆதரவாக காங். பேரணி: காவல்துறை விரட்டியடிப்பு

23rd Jan 2021 06:29 PM

ADVERTISEMENT

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர். 

கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் காவல்துறையினர் அவர்களை விரட்டியடித்தனர். 

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் பேரணியில் ஈடுபட்டனர்.

போபாலில் ஜவஹர் செளக் பகுதியிலிருந்து ஆளுநர் மாளிகை வரை நடைபெற்ற இந்த பேரணியில், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

தடையை மீறி பேரணி நடத்தியதால், பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில் காவல்துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் காங்கிரஸ் தொண்டர்களை கலைத்தனர்.

மேலும், காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங், ஜெய்வர்தன் சிங், குணால் செளத்ரி உள்ளிட்ட பல காங்கிரஸ் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 

Tags : Madhya Pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT