இந்தியா

'பட்ஜெட் அல்வா' வழங்கிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

23rd Jan 2021 07:33 PM

ADVERTISEMENT

பிப்ரவரி முதல் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சகத்தின் வழக்கமான நடைமுறையின்படி பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா வழங்கினார்.

ஆண்டுதோறும் நாட்டின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் நிதியமைச்சர் அல்வா தயாரித்து பட்ஜெட் தயாரிக்கும் ஊழியர்களுக்கு வழங்குவார். 

பிப்ரவரி 1ஆம் தேதி 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் நிதியமைச்சக வழக்கத்தின்படி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அல்வா கிண்டி ஊழியர்களுக்கு வழங்கினார்.

நடப்பாண்டு காகிதமின்றி டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT

Tags : Budget 2021-22
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT