இந்தியா

‘ஜனநாயகத்தை அழிக்கும் பாஜக’: ராஜஸ்தான் முதல்வர் விமர்சனம்

23rd Jan 2021 03:53 PM

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசை பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அழிக்கிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் இந்திரா பவனில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் மத்திய அரசு நிறுவனங்கள் தங்களது முதலாளிகளின் இசைக்கேற்ப நடனமாடி வருகின்றனர் எனத் தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் காங்கிரஸின் பிரதான எதிரி பாஜக தான் எனவும் மேற்கு வங்கத்தில் இடதுசாரி கட்சியுடன் கூட்டணியில் இணைவது பாஜகவை எதிர்ப்பதற்காகத் தான் எனவும் அவர் தெரிவித்தார்.

எனினும் கேரளத்தைப் பொறுத்தவரை நிலைமை மாறுபடுவதாகத் தெரிவித்த அசோக் கெலாட் விரைவில் கேரளத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT

பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை அகற்ற முயற்சிப்பதாகக் கூறிய அவர், இதன் மூலம் அவர்கள் இந்திய ஜனநாயகத்தையும் சுதந்திர உணர்வையும் அழிக்க முயற்சிக்கிறார்கள் எனத் தெரிவித்தார். 

Tags : Congress
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT