இந்தியா

தெலங்கானாவில் இன்றைய கரோனா பாதிப்பு 221: பலி 2 

23rd Jan 2021 11:42 AM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.93 லட்சமாக அதிகரித்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவில் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக தெலங்கானா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ADVERTISEMENT

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 221 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,93,056 லட்சமாக அதிகரித்துள்ளது.

புதிதாக இருவர் உயிரிழந்துள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட 3,569 பேர் தற்போது மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளனர். கரோனா இறப்பு விகிதம் 0.54 சதவிகிதமாகவும், குணமடைந்தோர் விகிதம் 98.24 சதவிகிதமாகவும் உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரேநாளில் மாநிலத்தில் 30,005 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 76.32 லட்சம் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags : Telangana coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT