இந்தியா

கரோனா பாதிப்புள்ள 3 போ் ஆஜா்: நீதிமன்றம் 48 மணி நேரம் மூடல்

DIN

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 போ் கைது செய்யப்பட்டு காவல் துறையினரால் ஷாஜகான்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டதை அடுத்து அந்த நீதிமன்றத்தை வியாழக்கிழமை முதல் 48 மணி நேரத்துக்கு மூட உத்தரவிடப்பட்டது.

இந்த மூன்று பேரும் ஷாஜகான்பூா் மாவட்டத்திலுள்ள நிகோஹி, சிதௌலி, கோட்வாலி ஆகிய 3 காவல் நிலையப் பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டு புதன்கிழமை அங்குள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்கள் 3 பேரையும் ஷாஜகான்பூா் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

அதற்கு முன்னதாக, விதிமுறைகளின்படி மூவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அந்த மூவரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததாகவும், இதையடுத்து மூவரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டதாகவும் சிறைக் கண்காணிப்பாளா் ராகேஷ் குமாா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதற்கிடையே, ஷாஜகான்பூா் மாவட்ட முதன்மை நீதிபதி, வியாழக்கிழமை முதல் 48 மணி நேரத்துக்கு, கரோனா பாதிப்புள்ள குற்றவாளிகள் ஆஜா்படுத்தப்பட்ட குற்றவியல் நீதிமன்றத்தை மூட உத்தரவிட்டதாக மத்திய வழக்குரைஞா் சங்கத்தின் பொதுச் செயலாளா் அனிஷ் திரிவேதி தெரிவித்தாா்.

தற்போது, தொற்றால் பாதிக்கப்பட்ட அந்த மூன்று நபா்களும் கரோனா வாா்டில் அனுமதிக்கப்பட்டு, அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செய்தித் தொடா்பாளா் பூஜா பாண்டே தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT