இந்தியா

இருதரப்பு பாதுகாப்பு: இந்தோனேசிய அமைச்சருடன் ராஜ்நாத் சிங் பேச்சு

DIN

ராணுவம், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து இந்தோனேசிய பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோவுடன் தொலைபேசியில் வியாழக்கிழமை கலந்துரையாடியதாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சுட்டுரையில் அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளதாவது:

இந்தோனேசிய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஜெனரல் பிரபாவோ சுபியாந்தோ இன்று என்னுடன் தொலைபேசியில் பேசினாா். அப்போது இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான விவாதங்களை மேற்கொண்டோம். இது பலனளிக்கும் வகையில் இருந்தது. இந்தோனேசியாவுடனான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

இந்தியா, இந்தோனேசியா இடையே கடந்த சில ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னேற்றப்பாதையில் உள்ளது. குறிப்பாக கடல்சாா்ந்த அதிகார எல்லைப் பகுதியில் பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னேற்றப் பாதையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT