இந்தியா

உ.பி.: கல்வி அமைச்சருக்கு கரோனா உறுதி

22nd Jan 2021 03:34 PM

ADVERTISEMENT

உத்தரப் பிரதேசத்தில் கல்வி அமைச்சர் குலாப் தேவிக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

 லக்னெளவின் நேற்று (ஜன.21) கரோனா பரிசோதனை செய்துகொண்டதில், தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ''கரோனா பரிசோதனை செய்துகொண்டதில் வெள்ளிக்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் என்னை சந்தித்துச் சென்றவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. அவர்கள் தாங்களாகவே முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

தற்போது நலமாக உள்ளேன். மக்களுக்கு சேவையாற்ற விரைவில் நலமாகி திரும்புவேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் நேற்றைய நிலவரப்படி 5,97,823 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,597-ஆக அதிகரித்துள்ளது.
 

Tags : uttar pradesh
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT