இந்தியா

புவனேஸ்வரத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் பணியில் திருநங்கைகள்

22nd Jan 2021 12:30 PM

ADVERTISEMENT

புவனேஸ்வரத்தில் பார்க்கிங் கட்டணத்தை வசூலித்து நிர்வகிக்கும் பொறுப்பை புவனேஸ்வரம் மாநகராட்சி திருநங்கைகளிடம் வழங்கியுள்ளது. 

'இது அவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களின் நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும். திருநங்கைகள் சமூகம் எங்களது பல்வேறு திட்டங்களில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளன. முன்னதாக நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கவும் திருநங்கைகள் ஈடுபடுத்தப்பட்டனர்' என்று புவனேஸ்வரம் மாநகராட்சி ஆணையர் பிரேம் சந்திரா சௌத்ரி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், 'பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் இந்தப் பணி இப்போது இரண்டு மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் உள்ளது. இந்த முயற்சி வெற்றி பெறும் என்று நம்புகிறோம். இரு மாதங்களுக்குப் பின்னர் திட்டத்தை விரிவுபடுத்துவோம்' என்றார்.  

திருநங்கைகள் சுய உதவிக் குழுத் தலைவர் மேக்னா சாஹூ இதுகுறித்து, 'திருநங்கைகளின் சார்பாக, மாநகராட்சி ஆணையர் பிரேம் சந்திரா சௌத்ரிக்கு நன்றி. இது எங்கள் சமூகத்தினருக்கு கண்ணியமான வாழ்க்கையை வாழ வாய்ப்பளிக்கும். இது. திருநங்கைகளை பிரதானமாகக் கொண்டு வருவதற்கான ஒரு படி. முதற்கட்டமாக 15 திருநங்கைகள், 2 திருநம்பிகள் பணியில் உள்ளனர். இது பின்னர் 36 ஆக உயர்த்தப்படும். 2 மணி நேர வாகன நிறுத்தத்திற்கு, இரு சக்கர வாகனம்- ரூ.5, நான்கு சக்கர வாகனம்- ரூ.25 வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார். 

ADVERTISEMENT

Tags : transgenders
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT