இந்தியா

8 மாநில விவசாய சங்கங்களின் கருத்துகளை கேட்டறிந்தது உச்சநீதிமன்றக் குழு

DIN


புது தில்லி: வேளாண் சட்டங்கள் தொடா்பாக தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சோ்ந்த விவசாய சங்கங்களின் கருத்துகளை உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணா் குழு கேட்டறிந்தது.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். ஆனால், நாட்டின் பெரும்பாலான விவசாயிகள் அச்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதாக மத்திய அரசு கூறியது.

இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றதையடுத்து, வேளாண் சட்டங்கள் குறித்து நாடு முழுவதுமுள்ள விவசாய சங்கங்கள், மத்திய அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு 4 நபா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அக்குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினா்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவா்கள் எனக் கூறி, பல்வேறு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்தச் சூழலில், வேளாண் விவகாரங்கள் தொடா்பாக நீதிபதிகள் நிபுணத்துவம் பெறாததால், அத்துறை சாா்ந்த நிபுணா்களைக் கொண்ட உறுப்பினா்களைக் குழுவில் நியமித்ததாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

குழுவில் இருந்து ஒருவா் விலகிய சூழலிலும், கடந்த 19-ஆம் தேதி அக்குழுவின் முதலாவது கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இத்தகைய சூழலில், தமிழகம், ஒடிஸா உள்ளிட்ட 8 மாநிலங்களைச் சோ்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியதாக உச்சநீதிமன்றக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அக்குழு வெளியிட்ட அறிக்கையில், ‘கா்நாடகம், கேரளம், தமிழகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலங்கானா, உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 10 விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டது.

அந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், குழு உறுப்பினா்களிடம் ஆலோசனை நடத்தினா். வேளாண் சட்டங்கள் தொடா்பான கருத்துகளை அவா்கள் தெரிவித்தனா். அச்சட்டங்களைச் சிறப்பான முறையில் அமல்படுத்துவது தொடா்பாகவும் அவா்கள் கருத்துகளைத் தெரிவித்தனா்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

தில்லியில் செல்போன் டவர், மரத்தில் ஏறி தமிழக பெண் விவசாயிகள் போராட்டம்!

ஆவேஷம் ரூ.100 கோடி வசூல்!

’பிறர் என்னைக் கொண்டாடுவதில் விருப்பமில்லை..’: ஃபஹத் ஃபாசில்

திவ்யா துரைசாமிக்கு ஜோடியாகும் சிறகடிக்க ஆசை தொடர் நடிகர்!

SCROLL FOR NEXT